தமிழ்நாட்டின் குரலாய் ஒலித்த ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

நேற்று மாலை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய ராகுல் காந்தி தமிழகத்தை முன்னிலைப்படுத்தி ஆவேசமாக உரையாற்றினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தன்…

நேற்று மாலை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய ராகுல் காந்தி தமிழகத்தை முன்னிலைப்படுத்தி ஆவேசமாக உரையாற்றினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் உரை நாட்டின் தலைமைக்கான உரையாக இல்லாமல் அரசு அதிகாரிகள் கொடுத்த தகவலாக இருப்பதாகக் கூறினார். அப்போது, பாஜகவினரின் குறுக்கீட்டால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது ஆவேசமாகப் பேசத் தொடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ,தமிழகஅரசு தொடர்ந்து நீட் தேர்விலிருந்துவிலக்கு கேட்டு கோரிக்கை வைத்தாலும் அதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

“அனைத்து மாநிலங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இந்தியா ஒரு தேசம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை, நீங்கள் அரசியலமைப்பைப் படித்தால் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்” பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது. தமிழ் நாட்டிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். என்று தன் உரையில் குறிப்பிட்டார். மேலும் தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரம், ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை. அவற்றுக்கு மத்திய அரசு மதிப்பளித்து சம உரிமை அளிக்க வேண்டும். மத்திய அரசு நாட்டு மக்களின் கருத்துகளுக்குக் காது கேட்காதது போல் நடந்து கொள்கிறது. “உங்களால் வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த முடியாது.தமிழ்நாட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்”
இவ்வாறு பேசிய ராகுல் காந்தி இறுதியாக அவையை விட்டு வெளியேறும் போது “மக்களவை உறையில் அதிகமாகத் தமிழ்நாடு பற்றியே குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களே என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார், “நான் தமிழன் தான்” என்று அந்தக் கேள்விக்குப் பதிலளித்தார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய ஆவேசமான உரை இந்தியா முழுவதும் ட்ரெண்ட்டாகியிருந்த நிலையில் தமிழ் நாட்டிலும் ராகுல் காந்தியின் பேச்சுக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்தன இந்நிலையில் தமிழ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ராகுல் காந்தியின் பேச்சுக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் “சுயமரியாதையை உயர்த்திப்பிடிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களைக் கொண்ட தமிழர்களின் நீண்ட கால வாதங்களை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தமைக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.