தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரையின் 53வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரையின் 53வது நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.
இவரைத்தொடர்ந்து அமைச்சர்கள் பலர் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தியுள்ளனர்.
https://twitter.com/mkstalin/status/1489094252709617666
இதன் தொடர்ச்சியாக, “அண்ணா என்று தமிழ்நாடே அன்புடன் அழைக்கும் இம்மண்ணின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உரத்து முழங்கிய கொள்கைகள் இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எதிரொலிக்கின்றன; மாநில சுயாட்சிக்கான குரல் வலுப்பெறுகிறது. பேரறிஞர் காட்டிய வழியில் எந்நாளும் பயணிப்போம்!” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
https://twitter.com/AIADMKOfficial/status/1489070649708404738
இதன் தொடர்ச்சியாக டிவிட்டரில், “நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” என பெயர் சூட்டி தனி அடையாளத்தை உருவகப்படுத்திய தமிழ்ச் சமூக முன்னேற்றத்தின் ஆணிவேர், நம் அதிமு கழகத்தின் சமுக,பொருளாதார,அரசியல் கொள்கை தொகுப்பான #அண்ணாயிசம் (Annaism)-தின் அடித்தளமான, நம் பேரறிஞர் அண்ணா நினைவை, புகழை போற்றி வணங்குவோம்!” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.








