முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமர் மோடியிடம், 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய மனுவில், 14 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளன. அதில், காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பான பிரச்சனையில் தீர்வு காணவேண்டும், பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மேலும், “கச்சத்தீவு” மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், நிலக்கரி குறித்த விவகாரங்களில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி பெறுவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கூடுதலான இரயில் தொடர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், அதேபோல ரெய்கார் – புகழுர் உயர் மின் அழுத்த மின் தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர்,

அண்மைச் செய்தி: ‘சிலிண்டருக்கு மாலை அணிவித்து எதிர்ப்பை தெரிவித்த எம்.பி’

மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்வது மற்றும் ஜுன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்குதல் வேண்டும் எனவும், மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) எதிர்ப்பு, அதேபோல, உக்ரைனில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு தடைபட்ட நிலையிலிருந்து இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழியைக் கண்டறிய வேண்டும் என தெரிவித்துள்ள அவர்,

பிரதம மந்திரி வேளாண்மை பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு (PMFBY) ஒன்றிய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்த வேண்டும் எனவும், காலணி உற்பத்தியில் பிஎல்ஐ (PLI) திட்ட அறிமுகப் படுத்த வேண்டும், மேலும் டிடிஐஎஸ் (DTIS) திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும், மேலும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல, சேலம் எஃகு ஆலையின் மிகை நிலம் பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்க வேண்டும், மப்பேடுவில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் (MMLP) வரை ரயில் பாதை அமைப்பது, தேசிய கல்வி கொள்கை – 2020, மற்றும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் – II – இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 50:50 பங்கு அடிப்படையில் ஒப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ள அவர், 2022ல் ஹஜ் புனிதப் பயணத்திற்கான புறப்படும் இடமாக சென்னையை அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், இலங்கை தமிழர் பிரச்சினை – ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் வழங்க வேண்டும், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லலுறும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்கள் உருவாக்க வேண்டும், நியூட்ரினோ ஆய்வக (INO) திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையோடு, கூடங்குளம் அணுமின் திட்டம் – செலவழித்த அணு எரிபொருள் நீக்க வேண்டும், மேலும், நரிக்குறவர்கள் / குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு!

Halley Karthik

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் எனக்கு ஊட்டச்சத்தாக மாறுகிறது-பிரதமர் மோடி

G SaravanaKumar

மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டம்: மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களைப் பெற உத்தரவு

Web Editor