டெல்லியில் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடந்து வரும் நிலையில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் 3 கட்ட பரப்புரையை தொடங்கியது. இன்று முதல் ஏப்ரல் 7 வரை நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, அவர்கள் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம்
பேசிய ராகுல் காந்தி, கடந்த 10 நாட்களில் 9 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர், எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாக்கூர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதே போல் ராகுல் காந்தியும் சிலிண்டருக்கு மாலை அணிவித்து தனது போராட்டத்தை தொடர்ந்தார்.