எட்டி விடும் தொலைவிலேயே, 10.5% உள் இட ஒதுக்கீடு – பாமக நிறுவனர் ராமதாஸ்

விரைவில் எட்டி விடும் தொலைவிலேயே வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.50% உள்…

விரைவில் எட்டி விடும் தொலைவிலேயே வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.50% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த ஆணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றம் அளித்ததாகவும்,

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக உயர்நீதிமன்றம் பட்டியலிட்டுள்ள காரணங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருப்பது வரவேற்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார். வன்னியர்களுக்கு எதிர்காலத்திலும் கூட இட ஒதுக்கீடு வழங்க முடியாதவாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பல முட்டுக்கட்டைகளை போட்டதாகவும், அவற்றை உச்சநீதிமன்றம் தகர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை பெற்று, வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க முடியும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்றுவதற்காக, தமிழ்நாடு அரசுக்கு பாமக அழுத்தம் கொடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘10.5% உள்ஒதுக்கீடு செல்லாது; உறுதி செய்தது உச்சநீதிமன்றம்’

மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பு சாதகமாகவே இருப்பதாகவும், விரைவில் எட்டிவிடும் தொலைவிலேயே வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.