முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுப்பிக்கப்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

ரூ.160 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மதுரை மாநகர் பகுதியில் ரூ.160 கோடி மதிப்பில் பெரியார் பேருந்து நிலையம் கட்டுமான பணி கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கியது. மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவந்த கட்டுமான பணி 90 சதவீதம் நிறைவுபெற்ற நிலையில், இன்று பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் பொதுமக்களின் வசதிக்காக நான்கு அடுக்குகளைக் கொண்ட வணிக வளாகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

பேருந்து நிலையத்தில் 371 நான்கு சக்கர வாகனங்கள் 4861 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல வளாகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரியத்தை கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து நிலையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருவதால் மாநகரின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்கள்

தனியார் வாகனங்கள் பேருந்து நிலைய வளாகத்துக்குள் வர மாநகராட்சி தடை விதித்துள்ளது. மேலும் சுற்றுலா தகவல் மையம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான விற்பனை அங்காடி திறக்கப்பட்டுள்ளன.

திறப்பு விழாவில் தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை தெற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சாகித்ய பால புரஸ்கார், யுவபுரஸ்கார் விருதுகள் அறிவிப்பு

G SaravanaKumar

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை; அசோக் கெலாட் அறிவிப்பு

G SaravanaKumar

’பீஸ்ட்..’ இதுதான் ’தளபதி 65’படத்தின் டைட்டில்!

Vandhana