பழனியில் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு, ஞானப்பால் ஊட்டும் விழா விமரிசையாக நடைபெற்றது.
சைவ சமயத்தின் பெருமை உலகெங்கும் பரவ செய்த நால்வரில் ஒருவர்
திருஞானசம்பந்தர். திருஞானசம்பந்தருக்கு, வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது.
ஞான சம்பந்தர் பெருமானுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்டவைகள் மூலம்
அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின் தங்கத்தினாலான
பொற்கொண்டை அணிவிக்கப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு,
மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், அருள்மிகு உமாமகேஸ்வரர் தம்பதி சமேதராக திருஞானசம்பந்தர் உடன்
கோயிலின் வடக்குப்பிரகாரத்தில் எழுந்தருளி, அங்கு சுவாமிக்கு தங்கத்தாலான
பொற்கிண்ணத்தில் இருந்து பால் பொற்கரண்டி மூலம் ஞானப்பால் ஊட்டப்பட்டது.
தொடர்ந்து , சுவாமி நான்கு ரத வீதியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில்
கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஞானப்பால் வழங்கப்பட்டது.
கு. பாலமுருகன்







