முக்கியச் செய்திகள் தமிழகம்

அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்-கவிஞர் வைரமுத்து

அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் ஐ.ஏ.எஸ் அகாடெமி திறப்பு விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து கூறியதாவது:
ராம்கி ஐ.ஏ.எஸ் அகெடமியை தொடங்கி வைப்பதில் பெருமை படுகிறேன். இதைத் திறந்து வைத்த அமைச்சர் பி.கே சேகர்பாபு அவர்களுக்கு நன்றி. இந்திய அளவில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ் பதவிகளுக்கு தேர்ச்சி ஆகும் சதவீதம் குறைந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக சற்றே மேம்பட்ட தேர்ச்சி சதவீதம் ஏன் குறைகிறது? என்று நாம் கவலையோடும் சிந்திக்க வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு

மேலும் பேசிய அவர் இந்திய ஆட்சிப் பணி என்பது வட இந்திய ஆட்சிப் பணி என்று மாறிவிட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு இருக்காது.

வடநாட்டு ஆதிக்கம், இந்தி ஆதிக்கம் மேலோங்கி உள்ளதால் தமிழ் மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்களா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்திய அளவில் தமிழ் மாணவர்கள் இளைத்தவர்கள் அல்ல; சளைத்தவர்கள் அல்ல. அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இளைஞர்கள் அரசியல் கடந்து போராடுகிறார்கள். இதை ஒன்றிய அரசு சிந்திக்க வேண்டும் என்று வைரமுத்து பேசினார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மஞ்சப்பைகளைப் பயன்படுத்துவதை பழகிக் கொள்ள வேண்டும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

Web Editor

மைக் டைசனுக்கு விஜய் தேவரகொண்டாவின் ’லைகர்’ படக்குழு பார்ட்டி!

Halley Karthik

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்; அவகாசம் கிடைக்க வாய்ப்பு

Saravana Kumar