முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் தீபத்தை ஏற்றுகிறார் பிரதமர் மோடி

சென்னையில் 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதற்கான தீபத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஏற்றுகிறார்.

 

சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 -ஆம் தேதி வரை  44 வது உலக செஸ் ஒலிம்பியாட்
போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான இலச்சினை மற்றும் சின்னம் சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக
ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர்
தலைமையில் வெளியிடப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இந்நிலையில், இந்த 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பிரத்யேக
ஒலிம்பியாட் தீபம் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் என உலக சதுரங்க கூட்டமைப்பு மற்றும் அகில
இந்தியா சதுரங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்க பட்டு இருந்தது.

 

அதன்படி இந்த வருடம் மட்டும் இந்தியாவில் ஒலிம்பியாட் தீபம் எடுத்து
செல்லப்படும் எனவும், அடுத்து வரும் தொடர்களில் இருந்து அனைத்து கண்டங்களில் இருக்கும் முக்கிய நாடுகளின் நகரங்களுக்கு எடுத்து செல்லப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இன்று மாலை, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஒலிம்பியாட்
தீபத்தை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். டெல்லி
செங்கோட்டையில் இருந்து தொடங்கப்பட்டு, இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களின் 75
நகரங்களுக்கு பயணித்து, இறுதியாக ஜூலை 28 ஆம் தேதிக்கு முன்பு சென்னை
வந்தடையும்.

 

ஒலிம்பியாட் தீபம்்் ஏற்றும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள AT IG அரங்கத்தில் இன்று மாலைைை 5 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இந்திய அணியின் A மற்றும் B குழு வீரர்
வீராங்கனைகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

 

– இரா. நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

” குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி “

Web Editor

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு வழங்க கோரி தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை

Vandhana

வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துவிட்டு இளம்பெண் தற்கொலை !

Vandhana