முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் – அமைச்சர் ஐ.பெரியசாமி

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீது உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பிரிவு அருகே புதிதாக ஆத்தூர் ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறை யார் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்றார். அதிகாரம் வைத்துள்ளவர்கள் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் நீதிமன்றம் மூலம் சரியான தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவைகள் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில பொருட்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் தமிழ்நாடு அரசு அதிகளவு வருவாய் ஈட்டி வருகிறது என்று நிர்மலா சீதாராமன் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் தற்போது நல்லாட்சி நடைபெறுகிறது. இதன் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறி விளைச்சல் அதிகப்படியாக உள்ளது.

எனவே, காய்கறிகள் அனைத்தும் தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்றார். ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரி என்பது வர்த்தகர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் சேரும் ஆனால் நூறு ரூபாய் பொருளுக்கு ஜிஎஸ்டி ஐந்து சதவீதம் என்றால் 15 ரூபாய் என்பது மட்டுமே வசூல் செய்ய முடியும் என கூறினார். தற்போது வரை ஜிஎஸ்டி வரியை வசூல் செய்த ஒன்றிய அரசு 24 ஆயிரம் கோடி தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டியுள்ளது.

 

வர்த்தகர்கள் தான் விலையை நிர்ணயம் செய்ய முடியும் அதில் தமிழ்நாடு அரசு இருக்க கூடிய ஜிஎஸ்டி வரியை வாங்க முடியாமல் இருக்கும்போது, கூடுதலாக எப்படி வரி வாங்க முடியும் என கேள்வி எழுப்பினார். வியாபாரிகள் ஜிஎஸ்டி வரியை எப்படி பொதுமக்களிடம் வாங்குகிறார்கள் என்பது தெரியாது என்ற அமைச்சர் ஐ.பெரியசாமி, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீது உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாயமான சிஆர்பிஎப் வீரர் கண்டுபிடிப்பு ?

G SaravanaKumar

காணாமல் போன சிறுவனை ‘வாட்ஸ் அப்’ மூலம் மீட்ட போலீசார்

G SaravanaKumar

இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்?

Arivazhagan Chinnasamy