விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
72வது குடியரசு தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், 2020ம் ஆண்டை நாம் கற்றுக்கொள்ளும் ஆண்டாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறினார். உலக நாடுகளின் பேராதரவுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நுழைந்துள்ளதாக குறிப்பிட்ட ராம்நாத் கோவிந்த், சுயசார்பு இந்தியா திட்டத்தால் நாடு வளர்ச்சிப்பாதையில் விரைவாக முன்னேறி செல்லும் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மிகக்குறுகிய காலத்திலேயே கொரோனா தடுப்பூசியை உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் வரலாறு படைத்துள்ளதாகவும் அவர் புகழ்ந்துரைத்தார்.
அண்மையில் வேளாண் மற்றும் தொழிலாளர் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல சீர்திருத்தங்கள் தொடர்பாக சில அச்சங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் குறிப்பிட்டார்.