முக்கியச் செய்திகள் இந்தியா

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதரன்-ஒப்புதலை நிறுத்திவைத்த மத்திய அரசு

கர்நாடகா, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீரில் உள்ள உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்த 3 பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

எனினும், ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்துவரும் தலைமை நீதிபதி எஸ்.முரளிதரனை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு முன்வைக்கப்பட்ட கொலீஜியத்தின் பரிந்துரையை நிறுத்தி வைத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி.வரலேவை நியமிக்கவும், ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டலை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரனை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை.

 நீதிபதி முரளிதரன் சென்னையில் கடந்த 1984ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கறிஞராக தனது பதவியை தொடங்கினார். பின்னர், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு 1987ம் ஆண்டு மாறினார். 2006இல் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு 2020 பிப்ரவரியில் உடனடியாக மாற்றப்பட்டார். 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தீபாவளிக்கு வாழ்த்து: இபிஎஸ் கேள்விக்கு முதலமைச்சர் பதில்

Halley Karthik

வார நாட்களில் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில் சேவை

Arivazhagan Chinnasamy

புதுச்சேரியில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

EZHILARASAN D