கேரளாவில் நரபலி கொடுப்பதற்காக இரு பெண்கள் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடவந்தரா பகுதியை சேர்ந்த பத்மா மற்றும் காலடி பகுதியை சேர்ந்த ரோசி ஆகியோர் எர்ணாகுளம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பத்மா திடீரென காணாமற்போன நிலையில் அவரை கண்டுபிடிக்க உறவினர்கள் கடவந்திர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை நடத்தினர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், இவர்களை அழைத்து வந்த புரோக்கர் ரசீது என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பத்மா மற்றும் ரோசி ஆகிய இருவரையும் அழைத்து வந்து எலந்தூர் பகுதியில் உள்ள டாக்டர் தம்பதிகள் பகவல் சிங், லைலா, ஆகியோர் நரபலி கொடுத்ததாகவும், பின் அவர்கள் இருவரையும் துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்து புதைத்ததாகவும் கூறினார்.
தொடர்ந்து இருவரையும் புதைத்த இடத்தில் போலீசார் சடலத்தை தோண்டி எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பகவல் சிங், லைலா, ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த விசாரணையின் போது கூடுதலாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பத்மா மற்றும் ரோசியை நரபலி கொடுத்த பின்னர், அவர்களின் உடலை சமைத்து சாப்பிட்டதாக மருத்துவ தம்பதிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைதான 3 பேரையும் அக்டோபர் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நரபலி கொடுத்து மனித கறியை சமைத்து சாப்பிட்ட இச்சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
கேரளாவில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்







