நேஷனல் ஹெரால்டு வழக்கு; அவகாசம் கோரும் சோனியா காந்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நேரில் ஆஜராவதற்கு விசாரணையை சில நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா கோரிக்கை விடுத்துள்ளார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன விற்பனையில் நடந்த சட்ட விரோத பண…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நேரில் ஆஜராவதற்கு விசாரணையை சில நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா கோரிக்கை விடுத்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன விற்பனையில் நடந்த சட்ட விரோத பண மோசடி குறித்து, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் ஆஜராக கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதனிடையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் விசாரணையை தள்ளி வைக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து நாளை (ஜூன்23) ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. பின்னர், சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் சமீபத்தில் வீடு திரும்பினார்.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய சோனியா கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால், முழுமையாக குணமடையும் வரை, நேரில் ஆஜராவதற்கு விசாரணையை சிறிது நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு சோனியா கடிதம் எழுதியுள்ளார் என பதவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.