இனிமேல் கட்டப்படும் ஒவ்வொரு அலுவலகங்களும், முதலமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள புதிய முகப்பு தோற்றத்தின்படியே இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு அறிவுறுத்தியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் கோவை மண்டலத்தில் பொறியாளர்கள் மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகள் குறித்து அமைச்சர் எ வ வேலு ஆய்வு மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அவர், புதிய கட்டடம் கட்டும்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபடம் (Approved Plan), 2 இலட்சம் சதுர அடிக்குமேல் இருந்தால், சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெற்று தான் கட்டடங்கள் கட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். புதிய கட்டடங்கள் கட்டும்போது, முகப்பு தோற்றம் (Front Elevation) எழில்மிக்கதாக இருக்க வேண்டும் எனவும், இனிமேல் கட்டப்படும் ஒவ்வொரு அலுவலகங்களும், முதலமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள புதிய முகப்பு தோற்றத்தின்படியே இருக்க வேண்டும் என்றும் கூறினார்.