அண்ணன் மேல் ஆத்திரம் – அண்ணி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பி!

திருப்பதியில்  அண்ணனை பழிவாங்க அண்ணனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் அருகே…

திருப்பதியில்  அண்ணனை பழிவாங்க அண்ணனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் அருகே உள்ள முனி
ரெட்டி நகர் காலனியைச் சேர்ந்தவர் மோகன்.  இவர் தனியார் நிறுவனம் ஒன்றில்
வேலை செய்து வந்தார்.  இவருடைய அண்ணன் தாஸ் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தம்பி மோகனுக்கு விருப்பமில்லாத பெண் ஒருவரை தாஸ் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

மோகனுக்கு திருமணம் நடைபெற்ற ஓராண்டில், கணவன் – மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக மோகனின் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார்.  ஆனால் தாஸ் தனது தம்பி மோகன் மற்றும் தம்பி மனைவி ஆகியோரை அழைத்து வந்து பெற்றோர், உறவினர் முன்னிலையில் சமாதானம் செய்து வைத்தார்.  ஆனால் அவர்கள் இருவரும் மீண்டும் பிரிந்து விட்டனர்.

இதனால் மனவேதனையில் இருந்த மோகன், தனக்கு விருப்பம் இல்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்த அண்ணன் தாஸ் மீது கடும் கோபத்தில் இருந்தார்.   எனவே அண்ணனை பழிவாங்க முடிவு செய்த அவர், நேற்று இரவு 9 மணியளவில் அண்ணன் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டிற்குள் புகுந்து அண்ணனின் மனைவி, அவருடைய இரண்டு குழந்தைகள் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, அவரும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பதி பல்கலைக்கழக போலீசார் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தம்பி மோகனே அவரது அண்ணனின் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து தானும் உயிரை மாய்த்துக் கொண்டது போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.  போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.