முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழ்நாட்டு மீனவர் ராஜாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கோவிந்தவாடியைச் சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தருமபுரி மாவட்டம் ஏமனூரைச் சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் காவிரியாற்றில் பரிசல் மூலம் கர்நாடக வனப்பகுதியில் மான்வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு வந்த கர்நாடக வனத்துறை இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது இளையபெருமாளும், ரவியும் ஆற்றில் குதித்து தப்பிவிட ராஜாவின் கதி என்னவானது என்று தெரியவில்லை. இந்த நிலையில் பாலாறு நீர்தேக்கப் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ராஜாவின் உடல் மிதந்தது. இதனை காண உறவினர்களும், ஊர்மக்களும் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

கர்நாடக வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர்  ராஜாவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் வலியுறுத்தினர். அதுவரை ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினர்.

இதனையடுத்து இந்த் துப்பாக்கிச்சூட்டிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு 5லட்சம் ரூபாய் நிவாரண நிதியும் வழங்கி உத்தரவிட்டார். சேலம் மாவட்ட எஸ்பி சம்பவம் நடைபெற்ற கர்நாடக எல்லை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இறந்த மீனவரின் உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கைகள் நேற்று வெளியாகின.  அதில் இறந்த மீனவரின் உடலில் துப்பாக்கி சூடு காயங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலை வாங்க மறுப்பு தெரிவித்த குடும்பத்தாரிடம் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார் நடத்திய பேச்சுவார்த்தையில் உயிரிழந்த ராஜாவின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ராஜாவின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் மேட்டூர் அடுத்துள்ள கோவிந்தம் பாடி கிராமத்தில் இருந்து புறப்பட்டனர்.

உயிரிழந்த ராஜாவின் உடலை பெற்றுக் கொள்வதில் நேற்று முதல் உறவினர்களிடையே குழப்பம் நீடித்தது. ஒரு தரப்பினர் உடலை நேற்றே பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.  மற்றொரு தரப்பினர் உடலை பெற்றுக் கொள்ளக் கூடாது என மாறி மாறி தெரிவித்து வந்த சூழ்நிலையில் ராஜாவின் மனைவிக்கு தனியார் பள்ளியில் வேலை வாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டதை தொடர்ந்து உடலை பெறுவதற்காக சேலம் புறப்பட்டனர்.

மீனவர் ராஜாவின் அண்ணன் காசி விஸ்வநாதன் இடம் உயிரிழந்த மீனவரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சொந்த ஊரான கோவிந்தபாடி கிராமத்திற்கு டிஎஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடல் கொண்டு செல்லப்பட்டது.
அங்கே காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் கோவிந்த பாடி மயானத்தில் ராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதனால் தமிழக மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரிழந்த ராஜாவிற்கு கிராம மக்கள், சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி சார்பில் அவருடைய மகன் தமிழ் குமரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கரூர்: புகழ்பெற்ற முருகன் கோவில் கும்பாபிஷேகம் -ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Web Editor

50% மட்டுமே அனுமதி: கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

EZHILARASAN D

ஸ்ரீபெரும்புதூரில் என்கவுன்டர்; கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

G SaravanaKumar