வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டில் உங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது. தமிழ்நாட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். என பாஜகவை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் உரை நாட்டின் தலைமைக்கான உரையாக இல்லாமல் அரசு அதிகாரிகள் கொடுத்த தகவலாக இருப்பதாகக் கூறினார். அப்போது, பாஜகவினரின் குறுக்கீட்டால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பேசிய ராகுல் காந்தி ஆவேசத்துடன் பே தொடங்கிய ராகுல் காந்தி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
, MAKE IN INDIA திட்டத்தால் எந்த மக்கள் பலனடைந்தார்கள் எனவும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு மட்டும் 3 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்ததாகவும் தெரிவித்தார். இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருப்பதாகக் கூறிய ராகுல் காந்தி, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 27 கோடி பேர் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். நீதித்துறை, தேர்தல் ஆணையம், என அரசின் கருவிகள் அனைத்தும் கூட்டாட்சி தத்துவத்தின் குரலை அழித்து வருவதாகவும், நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்த கவலையைத் தான் வெளிப்படுத்த விரும்புவதாகவும் கூறினார். “ அனைத்து மாநிலங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இந்தியா ஒரு தேசம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை, நீங்கள் அரசியலமைப்பைப் படித்தால் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்”.
தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரம், ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை அவற்றுக்கு மத்திய அரசு மதிப்பளித்து சம உரிமை அளிக்க வேண்டும். தமிழ அரசு தொடர்ந்து நீட்டிலிருந்து விலக்கு கேட்டு கோரிக்கை வைத்தாலும் அதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு நாட்டு மக்களின் கருத்துகளுக்கு அரசு காது கேட்காதது போல் நடந்து கொள்கிறது. பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது . தமிழ் நாட்டிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார்.
இறுதியாக அவையை விட்டு வெளியேறும் போது “மக்களவை உறையில் அதிகமாகத் தமிழ்நாடு பற்றியே குறிப்பிட்டு கொண்டிருக்கிறீர்களே என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார், “நான் தமிழன் தான்” என்று அந்தக் கேள்விக்குப் பதிலளித்தார் ராகுல் காந்தி.