நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமத்தில், இரவு நேரங்களில் இரண்டு கரடிகள் உலா வரும் சம்பவங்கள் அரங்கேறின. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், கரடிகளை பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கரடிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அதில், ஒரே ஒரு கரடி மட்டும் சிக்கியது.
ஏற்கனவே ஒரு முறை இதேபோன்று கூண்டுக்குள் சிக்கிய கரடி, கூண்டை உடைத்துக்கொண்டு தப்பியோடியது. அதேபோல் மீண்டும் நிகழாமல் தடுக்க, கரடி சிக்கிய கூண்டுக்கு மேல் கிராம மக்கள் பாறாங்கற்களை தூக்கி வைத்தனர். இதனால் கூண்டை உடைத்துக்கொண்டு கரடியால் தப்பமுடியவில்லை. இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி, கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.







