வேங்கைவயல் விவகாரம்; விசாரணையில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை – எஸ்.பி வந்திதா பாண்டே

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில், எவ்வித ஒளிவு மறைவும் இன்றி விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் தொடர்பாக வெள்ளனூர்…

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில், எவ்வித ஒளிவு மறைவும் இன்றி விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் 85 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் பட்டியலினத்தை சேர்ந்த 36 பேரிடமும், பிற சமூகத்தைச் சேர்ந்த 49 பேரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மலம் கலக்கப்பட்ட தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி ஆய்விற்காக சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு எவ்வித ஒளிவு மறைவு இன்றியும், வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.