எஸ்பிஐ வங்கி தேர்வு குறித்து சு.வெங்கடேசன் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்

எஸ்பிஐ வங்கியின் தேர்வை மாற்றி வைக்குமாறு  சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டத்திற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளனர். பொங்கல் திருநாளன்று நடத்தப்படும்…

எஸ்பிஐ வங்கியின் தேர்வை மாற்றி வைக்குமாறு  சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டத்திற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு
தேதியை மாற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில்
100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி
வட்டார அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து,
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்தியாவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப்
இந்தியா (எஸ் பி ஐ) வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண்டுதோறும்
தேர்வுகள் நடத்தப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஸ்டேட் வங்கியில் உள்ள 5,486 கிளர்க் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்நிலை தேர்வு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட முதன்மை தேர்வு வருகிற 15 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 15 தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 15, 16,17 ஆகிய மூன்று நாட்களும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்நிலையில் பொங்கல் பண்டிகை என்று இந்த தேர்வு நடத்தப்படுவதை மாற்றி அமைக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஒரு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.


இதனைத் தொடர்ந்து இன்று பங்கு கிளையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வங்கியின் பொது மேலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினார். தொடர்ந்து, திமுக தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.