முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

போலீசாரிடம் வாக்குவாதம்: வழக்கறிஞரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

ஊரடங்கு விதி மீறலை கண்டித்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் முகக் கவசம் அணியாமல் காரில் சென்ற பிரீத்தி என்ற பெண் வழக்கறிஞரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் ஆவேசமடைந்த பிரீத்தியின் தாயாரும் வழக்கறிஞருமான தனுஜா ராஜன், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து தனுஜா ராஜன் மீது காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, தனுஜா ராஜன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முன் ஜாமீன் வழங்க காவல்துறை சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதுபோன்ற சம்பவத்தில் முன் ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் எனவும் கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement:

Related posts

கேரளாவில் கடந்த ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா தொற்று!

Ezhilarasan

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் புகார்!

Ezhilarasan

நடிகர் டேனியல் குறித்து அவதூறு கருத்து பரப்புவோர் மீது நடவடிக்கை!

எல்.ரேணுகாதேவி