முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

14 வகையான மளிகைப் பொருட்களுக்கான டோக்கன்: நாளை முதல் விநியோகம்!

ரே‌ஷன் கடைகளில் 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும், ரூ.2 ஆயிரம் நிவாரணமும் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்பட உள்ளது.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

2-வது தவணையாக 2 ஆயிரம் ரூபாயும் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3 ஆம் தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

இதற்காக. நாளை (11 ஆம் தேதி) முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 14 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்று ரே‌ஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நாள் ஒன்றிற்கு 100 டோக்கன்களும், இதர பணி நாட்களில் நாள் ஒன்றிற்கு 200 டோக்கன் வரை விநியோகம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ரே‌ஷன் கடைகளில் 15 ஆம் தேதி முதல், 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும், ரூ.2 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது.

Advertisement:

Related posts

“ஆரம்பிக்கலாங்களா” கமலுடன் கை கோர்த்த லோகேஷ் கனகராஜ்!

Niruban Chakkaaravarthi

குடியரசுத் தலைவர் சிறப்பு அறைக்கு மாற்றம்!

Ezhilarasan

விலையுயர்ந்த காரை காபி கடையாக மாற்றியுள்ள இளைஞர்..

Ezhilarasan