உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “உச்சநீதிமன்ற வளாகத்திற்குள், இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
புனித இடமான நீதிமன்றத்தில் எந்த வகையான வன்முறையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பரபரபரப்புக்கு மத்தியில் நீதிபதி கவாய் ஆற்றிய அமைதியான மற்றும் கண்ணியமான பதில், அவரது நேர்மை, தைரியம் மற்றும் நமது அரசியலமைப்பின் கொள்கைகளில் அவர் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கைக்கு ஒரு சான்றாக நிற்கிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




