பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை எக்ஸ்பிரஸ், பாஜிராவ் மஸ்தானி, 83, பத்மாவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தீபிகா படுகோன். ஷாருக் கான் உடன் இவர் நடிக்கும் பதான் படம் அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
பிராஜெக்ட் கே என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் பட ஷூட்டிங் ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. அங்கு திடீரென அவர் சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனைக்கு தீபிகா அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், மருத்துவர்கள் அவரை சோதித்தனர். சற்று நேரத்துக்கு பிறகு அவர் மீண்டும் ஷூட்டிங் தளத்துக்கு சென்றார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகை திஷா பதானி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
-மணிகண்டன்








