முக்கியச் செய்திகள் இந்தியா

சென்னை கொண்டுவரப்பட்டது கடத்தப்பட்ட சிலைகள்

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, 10 சிலைகள் தற்போது சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்டு ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் வைக்கப்பட்டிருந்த துவாரபாலகர், நடராஜர், கங்கலமூர்த்தி கடயம், நாடிகேஸ்வர கடயம், நான்கு கைகளைக் கொண்ட விஷ்ணு, ஸ்ரீதேவி, சிவன் & பார்வதி சிலைகள், குழந்தைப் பருவ சம்பந்தர், நின்ற கோலத்தில் குழந்தை பருவ சம்பந்தர் ஆகிய சிலைகள் மத்திய கலை கலாச்சாரம் துறை உதவியுடன் மீட்கப்பட்டு நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட பத்து சிலைகளும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகள் தஞ்சாவூர், நாகை, நெல்லை அரியலூர் மாவட்ட கோயில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மீட்கப்பட்ட 10 சிலைகளும் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றம் மூலம் அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்படும். தற்போது சிலைகள் அனைத்தும், சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘நடிகர் அஜித் உடன் நடிக்க எப்போது வாய்ப்பு வந்தாலும் தான் நடிக்க தயார் – நடிகை நஸ்ரியா’

கடத்தப்பட்ட சிலைகளின் விவரம்:

  • துவரபாலா கல் சிற்பம், ஆஸ்திரேலியாவில் இருந்து 2020-ஆம் ஆண்டு மத்திய அரசால் மீட்கப்பட்டது. இந்த சிலை நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள முண்டீஸ்வர முடையார் திருக்கோவிலில் 1994-ஆம் ஆண்டு திருடப்பட்ட சிலை.
  • நடராஜர் சிற்பம், 2021-ஆம் ஆண்டில் ஆனஸு அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. புன்னைநல்லூர் கிராமம், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து திருடப்பட்டுள்ளது.
  • கண்கல மூர்த்தியின் சிலை, 2021-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்துமீட்கப்பட்டது. 1985-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா, ஆழ்வார் குறிச்சி கிராமத்தில் இருந்து திருடப்பட்டுள்ளது.
  • நந்திகேஷ்வரர் சிலை 2021-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 11-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலை 1885-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் ஆம்பசமுத்திரம் தாலுகாவில் உள்ள நரசிங்கநாதர் கோவிலில் இருந்து திருடப்பட்டது.
  • நான்கு கைகள் கொண்ட விஷ்ணு சிலை, 2021-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டது. 12-ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தை சேர்ந்த சிலை அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து 2008-ஆம் ஆண்டு திருடப்பட்டுள்ளது.
  • பார்வதி தேவி சிலை, 2021-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டுள்ளப்பது. கிபி 10-11 நூற்றாண்டை சேர்ந்த சிலை அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து திருடப்பட்டுள்ளது.
  • சிவன் பார்வதி சிலை, 2021-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டது. கிபி 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலை பாபநாசம் தீபம்பாள்புரம் வான்மிகநாதர் கோவிலில் இருந்து திருடப்பட்டுள்ளது.
  • நிற்கும் குழந்தை சம்பந்தரின் சிலை, 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்துமீட்கப்பட்டது. 7-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலை நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள சயவனம் கிராமத்தில் சயனீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்டது.
  • குழந்தை சம்பந்தரின் சிலை 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 7-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலை 2005-ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட சிலை. (எந்த கோவில் என கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

EZHILARASAN D

ஜெயலலிதா போன்று மு.க.ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்கி வருகிறார்: செல்லூர் ராஜூ

Halley Karthik

ஆர்ஆர்ஆர் படத்தின் கதையை விளக்கும் புத்தகம் – மகனுக்காக தயாரித்த ஜப்பான் தாய்

Web Editor