இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கேரளாவில் ஒரே நாளில் 1465 பேருக்கு கொரானா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகமெங்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக உலக நாடுகள் பல ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தது.
இதேபோல் இந்தியாவிலும் கொரோனா பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் அன்றாட வாழ்க்கை முறைக்கு திரும்பினர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1465 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோட்டயம் போன்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்கவும், நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே பரிசோதனை மேற்கொள்ளவும் சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4000 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. 10 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.