சிறுமியின் கருமுட்டை விற்பனை; மேலும் ஒருவர் கைது

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் போலி ஆவணம் தயாரித்து கொடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோட்டை சேர்ந்த 38 வயதான சுமையா என்பவருக்கு 16 வயதில் சிறுமி உள்ளார். சிறுமிக்கு 3…

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் போலி ஆவணம் தயாரித்து கொடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோட்டை சேர்ந்த 38 வயதான சுமையா என்பவருக்கு 16 வயதில் சிறுமி உள்ளார். சிறுமிக்கு 3 வயது இருக்கும்போதே அந்த பெண் தனது கணவரை பிரிந்துள்ளார். அதன்பிறகு ஈரோட்டை சேர்ந்த 40 வயதான பெயிண்டர் ஒருவருடன் சேர்ந்து அந்த பெண் இருந்துள்ளார். ஆனால், சிறுமியின் தாய் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து தன்னுடைய கருமுட்டையை விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், சுமையாவின் 16 வயது மகளை, சையது அலி பாலியல் வன்கொடுமை செய்து, அவரிடம் இருந்து எட்டு முறைக்கும் அதிகமாக, கருமுட்டை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சிறுமிக்கு அவர்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலும் செய்து வந்துள்ளனர். இதனால், மனவேதனை அடைந்த சிறுமி தனது உறவினர்கள் மூலம், ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘சென்னை வந்தடைந்தது கடத்தப்பட்ட சிலைகள்’

சிறுமி கொடுத்த புகாரின்பேரில் சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சிறுமியின் தாய், தாயின் கள்ளக்காதலன், மாலதி ஆகிய 3 பேர் மீது போக்சோ உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த நிலையில் சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்வதற்காக போலி ஆவணம் தயாரித்து கொடுத்த ஜானை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.