நடிகர் அஜித் உடன் நடிக்க எப்போது வாய்ப்பு வந்தாலும் தான் நடிக்க தயாராக உள்ளதாக அடடே சுந்தரா படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை நஸ்ரியா தெரிவித்துள்ளார்.
காதல் மற்றும் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள ‘அடடே சுந்தரா’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில், தெலுங்கு நடிகர் நானி, நாஸ்ரியா நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜுன் – 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும், இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை திரைப்படமாக இப்படம் இருக்கும் என நானி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்தப்படத்தில் நானிக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பின் நஸ்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை நடிகை நஸ்ரியா சந்தித்தார். அப்போது, நான் பிளான் செய்து எந்த படத்திலும் நடிப்பதில்லை என்ற அவர், கதை பிடித்தால் அந்த படத்தில் தான் நடிப்பதாக கூறினார். மேலும், நல்ல கதைக்கு காத்திருந்ததால் தான் மீண்டும் தமிழில் நடிக்க நீண்ட காலம் ஆனதாக தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘திருமணச் சான்றிதழ் வழங்குவது ஆர்ய சமாஜ் அமைப்பின் பணியல்ல; உச்சநீதிமன்றம்’
தொடர்ந்து பேசிய அவர், நடிகர் அஜித் உடன் நடிக்க எப்போது வாய்ப்பு வந்தாலும், நான் நடிக்க தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், காதலுக்காக கடைசி வரை போராட வேண்டும். ஏனென்றால் காதல் காதல் தான் என அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







