முதலமைச்சர் விஜய் தலைமையில் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை குறித்த ஆய்வுக்கூட்டம்…!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தவெக அரசின் முதல் பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் (ஆகஸ்ட்-6) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் துறைவாரியாக ஆய்வுகூட்டம் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் இன்று முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ.சித்திக், இ.ஆ.ப., திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தியா வேணுகோபால் சர்மா, இ.ஆ.ப. மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.