#INDvsNZ | நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை! 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நிதான ஆட்டம்!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 103 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று (அக்-24ம் தேதி)…

The 2nd day of the India-New Zealand 2nd Test has concluded today.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 103 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று (அக்-24ம் தேதி) தொடங்கியது. இந்திய அணியில் லோகேஷ் ராகுல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் இடம் பிடித்தார்.

இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையும் படியுங்கள் : BANvsSA 2-ஆவது டெஸ்ட் போட்டி | தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

பின்னர், 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன கான்வே 17 ரன்களிலும், அவரை தொடர்ந்து வில் யங் 23 ரன்களிலும், ரவீந்திரா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர், களமிறங்கிய டேரில் மிட்செல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த கேப்டன் லதாம் 86 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

2-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் அடித்துள்ளது. டாம் பிளண்டெல் 30 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுந்தர் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். நியூசிலாந்து இதுவரை 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.