ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்!

ஈரான் மீது இன்று இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இன்று இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால், அந்நகரத்தின் வானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ள விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் நடைபெற்றுள்ளதாக, தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின்போது 86 வயதான கமேனி அவரது அலுவலகத்தில் இருந்தாரா? அவரது நிலை என்ன? என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும்நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. மேலும், ஈரான் மீதான இந்தத் தாக்குதலில் இஸ்ரேலுடன் அமெரிக்காவும் இணைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2025 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் நடைபெற்ற 12 நாள் போரில் ஆயிரக்கணக்கான மக்கள், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.