முக்கியச் செய்திகள் சினிமா

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த்

தனது பிறந்தநாளை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த், நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது பிறந்தநாளன்று அன்போடு வாழ்த்திய, பிரதமர் மோடிக்கும், மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி மற்றும் மாநில ஆளுநர்கள், ஆகியோருக்கும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, ஜி.கே.வாசன், அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், சீமான், டிடிவி.தினகரன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கமல்ஹாசன், வைரமுத்து, கிரிக்கெர் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி உள்ளிட்ட பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ஹூட் ஆப் மூலமும் நன்றி தெரிவித்துள்ளார்.

அன்மையில், தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய ஹூட் செயலியை நடிகர் ரஜினிகாந்த் துவங்கி வைத்தார் அதன்பிறகு, அவர் தொடர்ந்து ஹூட் செயலி வழியாக தன்னுடைய அப்டேட்களை வெளியிட்டு வருகிறார், அதன்படி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ஹூட் ஆப் மூலமும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Advertisement:
SHARE

Related posts

அடுத்த 2 நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள்!

Jeba Arul Robinson

மேகதாது அணை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்- பி.ஆர். பண்டியன்

Jeba Arul Robinson

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

Saravana Kumar