முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்!

சென்னையிலிருந்து பயணிகள் விமானம் மூலம் தோஹா வழியாக மருத்துவ பரிச்சோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது “அண்ணாத்த” திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அண்ணாத்த படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாதபோது அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமானார். அதற்குப் பின்பே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தொடர்ச்சியாகப் படங்கள் நடித்து வந்தாலும் அவ்வப்போது அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்று வருவார்.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தார். அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததால் அவர் உடல் பரிசோதனை செய்துகொள்ள அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“விளிம்புநிலையில் இருக்கும் அனைவரையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி” – முதலமைச்சர்

Halley Karthik

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை

EZHILARASAN D

இந்தியாவில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு

Halley Karthik