ராகுல் காந்திக்கு மு.க. ஸ்டாலின் இன்று காலை நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலையில் ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நடந்த குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நேற்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தமிழகத்தின் நெடுநாள் கோரிக்கைகளை ஆவேசமாக முன் வைத்தார் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “சுயமரியாதையை உயர்த்திப்பிடிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களைக் கொண்ட தமிழர்களின் நீண்ட கால வாதங்களை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தமைக்கு நன்றி” என நெகிழ்ச்சியான பதிவு செய்திருந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ட்விட்டர் பதிவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக “நாட்டின் எல்லா மாநில மக்களையும் போலத் தமிழர்களும் என் சகோதர சகோதரிகளே, இந்தியாவின் பன்மைத்துவ கூட்டாட்சி மற்றும் கூட்டுறவு சிந்தனையில் நம் நம்பிக்கை வெற்றிபெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி ஸ்டாலின் அவர்களே” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ராகுல் காந்தி.








