சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது திறமையின்மையை மறைக்கப் பார்க்கிறாரா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 7 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் அதற்கு யாராவது பதில் கடிதம் எழுதியுள்ளனரா என்றும் அப்படி எழுதியிருந்தால் அதனை வெளியிட முடியுமா எனவும் கூறியுள்ளார்.
மேலும், தம்மால் தான் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது என முதலமச்சர் மு.க.ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம்
திமுகவும் அதன் தலைமையும் சமூக நீதிக் கூட்டமைப்பு என்ற ஒன்றை ஏற்படுத்துவதும் அதில் சேர இந்தியாவில் உள்ள 37 கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி இருப்பதும் உள் நோக்கம் கொண்டது எனக் கூறியுள்ளார்.
9 மாத கால ஆட்சியில் ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில் திமுக அரசின் தோல்வியை மறைக்க சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் காகிதப்பூ நாடகம் வேண்டாம் எனக் கூறியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது திறமையின்மையை மறைக்கப் பார்க்கிறாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







