தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள உள்ளிக்கடை கிராமத்திலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த உள்ளிக்கடை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் கடந்த சில நாட்களாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.
இதனை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம்,வாஸ்து சாந்தி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோயிலை வலம் வந்து கோயில் விமானத்திலுள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
வேந்தன்







