தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் – பிரியதர்ஷினி தம்பதிக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த 25-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் வயிற்றில் பிரச்சினை இருந்ததால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் கையில் செலுத்தப்பட்டிருந்த ஊசியை அகற்றும்போது செவிலியரின் கவனக்குறைவால் கட்டை விரலை துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த விவகாரம் குறித்து 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.







