முக்கியச் செய்திகள் தமிழகம்

108 ஆம்புலன்ஸ் விபத்தில் கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பிரசவ வலியால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சேராபட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமிக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலட்சுமியை கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். ஏரிக்கரை சாலையில் வந்து கொண்டிருந்த ஆம்புலன்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துகுள்ளானது.

இதில் கர்ப்பிணி ஜெயலட்சுமியின் உறவினர்கள் செல்வி, அம்பிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜெயலட்சுமி, பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோர் காயமடைந்து சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்!

Gayathri Venkatesan

கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்: முதல்வர்!

Jeba

ஒரே நாளில் 1 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி!

Niruban Chakkaaravarthi