நடிகர் விஜய் வெளியிட்ட ஷாருக்கானின் `பதான்’ பட டிரைலர்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ படத்தின் டிரைலரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் வெளியான 19 நிமிடத்தில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த்…

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ படத்தின் டிரைலரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் வெளியான 19 நிமிடத்தில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ள படம் `பதான்’. இந்த படத்தை பிரபல இந்தி பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஜான் ஆப்ரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் குறித்து சர்ச்சை ஏற்பட்டது. அதாவது, அந்தப் பாடலில் நடிகை தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி அனிந்து நடித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தப் படத்தின் டிரைலரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ட்விட்டில் நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.  தெலுங்கு நடிகர் ராம் சரணும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டிரைலரை வெளியிட்டுள்ளார். இந்தப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது.

ஹாப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ், ஓம் சாந்தி ஓம் ஆகிய படங்களுக்குப் பிறகு ஷாருக்கானும் தீபிகா படுகோனும் இணைந்து நடிக்கும் நான்காவது படமாக ‘பதான்’ உருவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.