முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்திய குடிமை பணி தேர்வில் வென்றவர்கள் மத்திய அரசு பக்கம் தான் செயல்பட வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்திய குடிமைப் பணி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மத்திய அரசு பக்கம் தான் செயல்பட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் வென்று நேர்முகத்தேர்வை எதிர்கொள்வோருடன் ஆளுநர் நடத்தும் உத்வேகமூட்டும் ”எண்ணித் துணிக” கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்தியா முழுவதிலும் இருந்து 80 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு தேர்வர் குறித்தும் தனித்தனியாக பெயர், படிப்பு மற்றும் ஊர் என்ன என்பதை ஆளுநர் கேட்டறிந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உங்கள் நேர்முகத்தேர்வு தேதி பற்றி தெரியுமா என்று கேட்டதற்கு, இந்த மாதம் 30ம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது என தேர்வர்கள் தெரிவித்தனர். இந்த நேர்முகத்தேர்வு உங்களை பற்றியது. நீங்கள் எந்த விதத்தில் கேள்வியை அணுகி பதில் அளிக்கிறீர்கள் என்பது பற்றியது என்று கூறினார்.

நீங்கள் யாரையாவது பார்த்து பேசும் போது உங்களிடம் சகஜமாக பேச தோன்ற வேண்டும். உடைகளை நேர்த்தியாக அணிய வேண்டும். இன்னும் கூட நேரம் இருக்கிறது உங்களுக்கு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்ளுங்கள். பொருத்தமாக இருக்க கூடிய உடைகளை தயார் செய்து கொள்ளுங்கள். உங்களை முதல் பார்வையில் பார்க்கும் போது presentable ஆக இருக்க வேண்டும். கேள்வி கேட்கப்படும் போது வேகத்துடன் பதில் அளிக்க வேண்டியதில்லை. முதலில் கேள்வியை கவனியுங்கள். பின்னர் யோசித்து பதில் அளியுங்கள் என்றார்.

ஒவ்வொரு செய்தித்தாள் செய்தியும் யாரோ ஒருவரின் கருத்து. உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.( difference between Opinion and opinionated). நீங்கள் சமூக ஆர்வலர்கள் இல்லை ஐஏஎஸ் அதிகாரியாக என யோசித்து செயல்பட வேண்டும்.கருத்துக்கள் எப்போதும் கருத்துகள். அது தான் முடிவான உண்மை என்பதல்ல. எந்த பாலிசி ஆக இருந்தாலும் அது யாரோ உருவாக்கியது தான்.

உதாரணமாக யாராவது மகாத்மா காந்தியின் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் பற்றி கேட்டால், இந்த திட்டம் தேசத்தில் வறுமையில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்ப்படுத்தி தருவது, வேலை மூலம் ஊதியம் பெற வைப்பது. இதன் மூலம் அவரின் வாழ்வு மேம்படும். எனவே இது நல்ல திட்டம்.

உங்களுக்கு கேள்விகளுக்கு பதில் தெரியாமலும் போக வாய்ப்புள்ளது. கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால், கவலை பட வேண்டாம். தெரியாது என்று பதில் சொல்லாமல் புன் முறுவலுடன் அதனை எதிர்கொள்ளுங்கள். உங்கள் சிரித்த முகம், நேர்த்தியான உடை, வேகமாக பதில் அளிக்காமல் சிந்தித்து பதில் அளிப்பது, கேள்விக்கு பதிலை எங்கு தொடங்கியது என்பதில் இருந்து சொல்ல வேண்டியதில்லை. சரியாக சுருக்கமாக பதில் அளித்தால் போதும். பதில் தெரியாத கேள்விக்கு இதன் பதிலுக்கு தேவையான தரவுகள் என்னிடம் இல்லை என்று புன்முறுவலுடன், பதட்டமில்லாமல் பதில் அளிப்பது உள்ளிட்டவை நேர்முகத் தேர்வுக்கு தயாராக வேண்டியது என்று சில அறிவுரைகளை வழங்கினார்.

4 வது முறை நேர்முகத் தேர்வை சந்திக்க இருக்கும் ஒரு தேர்வர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர், ஒரு ஐஏஎஸ் தேர்வரிடம் எதிர்பார்ப்பது என்ன என்ற கேள்விக்கு, Upsc ஒரு சிவில் சர்வீஸ் அதிகாரியை தான் எதிர்பார்க்கிறது. சமூக சீர்திருத்தவாதியை அல்ல. ஒரு பிரச்சினையை, கேள்வியை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது முக்கியம். என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது activist செய்வது. ஒரு அதிகாரியாக எப்படி செயல்பட வேண்டும், அமைதியாக , கோப்படாமல் உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு கருத்தை ஏற்றுக் கொள்ள மனமில்லை என்றாலும், அதனை கோபத்துடன் அல்லாமல் மென்மையாக வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

அடுத்த தேர்வர் பொறியியல் துறை படித்தவர்களிடம் அறிவியல் சார்ந்த கேள்வி எழுப்பப்பபடும் போது எப்படி 100% தெரியாமல் பதில் அளிப்பது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநர், நீங்கள் பொறியியல் துறையில் தேர்வு பெற்றவர். மற்றவை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால் உண்மையை சொல்லுங்கள் எனக்கு முழுமையாக தெரியாது என்று. நேர்மை மிகவும் முக்கியம் என்று கூறினார்.

ஆந்திராவில் இருந்து வந்த தேர்வர் கேட்ட கேள்வி, மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் , உச்சநீதிமன்றத்துக்கும் கருத்து வேறுபாடு, கொள்கை வேறுபாடு இருக்கும் நான் எதை பின்பற்றுவது. ஆளுநர், குழப்பம் வேண்டாம் நீங்கள் மத்திய அரசு பக்கம் தான் செயல்பட வேண்டும். மத்திய அரசு மூலம் இந்திய குடிமைப் பணிகள் தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்டவர்கள் நீங்கள் என்று கூறினார்.எப்படி நேர்மையாக கருத்தை சொல்வது என்ற கேள்விக்கு, ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்து கொண்டவர்கள். எது நேர்மையான கருத்து. நாம் ஒரு சூழ்நிலையை எப்படி பார்க்கிறோம் என்பதில் தான், நம் கருத்து உள்ளது. அது அந்த நேரத்திற்கு உரிய உங்கள் கருத்து. சூழ்நிலை உண்மை மாறும் போது மாற்றங்கள் வரலாம்.

பண மதிப்பிழப்பு நல்லதா இல்லையா என்ற கேள்விக்கு, எந்த ஒரு மாற்றம் என்றாலும் அதில் பிரச்சனைகள் இருக்க தான் செய்யும். ஆம் பணமற்ற பரிமாற்றத்தில் முழுமையை அடையவில்லை. இன்னும் பண பரிவர்த்தனை உள்ளது. ஆனால் தெருவோர கடைகள் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை சென்றடைந்துள்ளது என்று கூறினார்

பதற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்விக்கு, ஆழ்ந்த மூச்சு விடுதல், தண்ணீர் சரியாக குடிக்க வேண்டும், சரியான நேரத்தில் தூங்க வேண்டும். நாவல் ஒன்றில் இருக்கும் வரிகளை நினைவு கூறினார். 21 வயதில் நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகி உள்ளீர்கள் அந்த நம்பிக்கையை உடன் எடுத்து கொள்ளுங்கள். சிவில் சர்வீஸ் தான் உலகின் முடிவு என்பதல்ல இதில் வெற்றி இல்லை என்றாலும் எதுவும் மாற போவதில்லை. உங்களை கேள்வி கேட்பவர்கள் மனிதர்கள் தான் என்று அந்த தேர்வருக்கு ஊக்கம் அளித்தார்.

பெண்கள் முன்னேறி வர வில்லை என்றால் நாடு முன்னேற்றம் அடையாது. அதனால் தான் பிரதமர் மகளிருக்காக பல திட்டங்களை முன் எடுக்கிறார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுசால்ல இருக்கு.. கனவில் வந்து பாலியல் வன்கொடுமை, பெண் புகாரால் போலீஸ் அதிர்ச்சி!

EZHILARASAN D

போலி பாஸ்போர்ட் வழக்கு: உயர்நீதிமன்ற “Q பிரிவு” காவல்துறையினர் முதற்கட்ட அறிக்கை

G SaravanaKumar

மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு – மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் விளக்கம்

EZHILARASAN D