முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா

கொரோனா பரிசோதனைக்கு ரூ.40 லட்சமா? அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்

கொரோனா பரிசோதனை செய்துகொண்டதற்காக வந்த கட்டணத்தைக் கண்டு இளைஞர் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து தன்னை உருமாற்றிக்கொண்டே வரும் கொரோனாவால், தொடர்ந்து  கட்டுக்குள் வராமல் கபடி ஆடிக்கொண்டே இருக்கிறது. இப்போது அதன் இரண்டாம் அலை முடிந்து மூன்றால் அலை வரும் என்று கூறியிருக்கிறார்கள். உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை மொத்தமாக அழிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அதற்கான தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட ஒருவருக்கு பில், அவர் இதயத்தை ஒரு நிமிடம் நிறுத்தி இயங்க வைத்திருக்கிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் டிராவிஸ் வார்னர். இவருக்கு லேசான காய்ச்சல் இருந்திருக்கிறது. இதையடுத்து அங்குள்ள லெவிஸ்விலே செண்டரில் பரிசோதனைக்காக சென்றார். பிசிஆர் டெஸ்ட்டில் இருந்து இன்னும் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தகவல் வந்தது.

டிராவிஸ் வார்னர்

மகிழ்ச்சியாக இருந்த அவருக்கு வந்த மருத்துவக் கட்டணம் அவரை அப்படியே ஷாக் கொடுத்திருக்கிறது. அவருக்கு 56,384 டாலர் என்று கட்டணம் வந்திருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.42 லட்சம். இதில் பிசிஆர் பரிசோதனைக்காக மட்டும் 54,000 டாலர் கட்டணம் வந்துள்ளது. அதாவது சுமார் 40 லட்சம்.

இவர் மனைவியும் அதே மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்திருக்கிறார். அவருக்கு வந்த கட்டணம் ஆயிரம் டாலர். இந்திய மதிப்பில் 74 ஆயிரம் ரூபாய். இதில் அவர் இன்சூரன்ஸ் மூலம் பாதியை குறைத்திருக்கிறார். ஆனால், அவர் கணவர் நிலைதான் பரிதாபம். பிறகு மருத்துவமனை நிர்வாகம், அது பில்லிங் பிழை என்று கூறி சரிசெய்திருக் கிறது. பிறகுதான் வார்னர் அப்பாடி என்று நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.

Advertisement:
SHARE

Related posts

நடிகர் சங்க தேர்தல்: ஹீரோவின் கையை கடித்த நடிகையால் பரபரப்பு

Halley karthi

பாகிஸ்தானில் லேண்ட் க்ரூஸர் கார் ஓட்டும் 5 வயது சிறுவன்; வைரல் வீடியோ

Jeba Arul Robinson

அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட மின்சார கார் உற்பத்தி திட்டம் ரத்து – எலன் மஸ்க்

Jeba Arul Robinson