இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் இன்ஸ்டாவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஐந்தரை கோடியை தாண்டியிருக்கிறது.
பிரபல இந்தி பட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இலங்கையை சேர்ந்த இவர், மும்பை யில் இருந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்போது சுதீப் நடிக்கும் ’விக்ராந்த் ரோணா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது.
இது தவிர இந்தியில், அட்டாக், சிர்கஸ், ராம் சேது உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். தொழிலதிபர் ஒருவரை காதலித்து வரும் அவர், மும்பை ஜுஹு பகுதியில் பங்களா ஒன்றை வாங்கியிருப்பதாகவும் அதன் விலை ரூ. 175 கோடி என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியாயின.
நடிகை ஜாக்குலின் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இன்ஸ்டா கிராமில் அடிக்கடி புதிய ஸ்டில்களை வெளியிட்டு வருவார். அதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்வது வழக்கம். கமென்ட்களும் கன்னாபின்னாவென்று விழும்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் ஐந்து கோடியை தாண்டியது. இந்நிலையில் இப்போது அவருடைய பாலோயர்களின் எண்ணிக்கை ஐந்தரை கோடியை தாண்டி இருக்கிறது. இதை இன்ஸ்டா வில் தெரிவித்துள்ள அவர், ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.








