தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் மாசிப்பெருவிழா!

தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மாசி மகப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி, அம்பாள்…

தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மாசி மகப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா, காலையில் அபிஷேக தீபாராதனையும், இரவில் கட்டளைதாரா் தீபாராதனையும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 5-ம் தேதி தேரோட்டமும், மார்ச் 6-ம் தேதி காலை தீர்த்தவாரியும்,மாலையில் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.