தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது.குற்றால அருவிகளுக்கென உலகெங்கும் தனிப்புகழ் உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் சாரல் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஐந்தருவி,பாலருவி,பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. ஐந்தருவி பகுதியில் நேற்று குளித்துக்கொண்டிருந்த பெண் மீது கற்கள் விழுந்ததையடுத்து காவல் துறையினர் சார்பில் தடுப்புகளை அமைத்து சுற்றுலாப் பயணிகளை வரிசையில் காத்திருந்து குளிக்க அனுமதிக்கின்றனர்.
மேலும் அவ்வப்போது விழும் சாரல் மழைத்துளிகளால் நகரெங்கும் ரம்மியான சூழல் நிலவுகிறது.குற்றால சீசன் களை கட்ட துவங்கியுள்ளதால் நாட்கள் செல்ல,செல்ல சுற்றுலாப் பயணிகளின் வருகை வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேந்தன்







