முக்கியச் செய்திகள் தமிழகம்

தற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர் பணி : சென்னை மாநகராட்சி

கொரோனா நோய் தடுப்பு பணி மேற்கொள்ள, தற்காலிக மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர் பணிகளுக்கு, சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவ அலுவலர்களுக்கு 150 பணியிடங்களும், செவிலியர்களுக்கு 150 பணியிடங்களும் காலியாக உள்ளதாகவும், பணிபுரிய விருப்பமுள்ளவர்கள், தகுதியுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அசல் கல்விச் சான்றுகளுடன் நாளை மற்றும் நாளை மறுநாள், நேர்காணலில் நேரடியாக பங்கேற்கலாம், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிகள், ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையிலான, தற்காலிக பணியே தவிர, எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ அலுவலர்களுக்கு மாத ஊதியமாக 60 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், நேர்காணல் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேர் கைது!

Gayathri Venkatesan

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி – 51 ராக்கேட்!

Gayathri Venkatesan

கல்விக் கடனில் தமிழகம் முதலிடம்

Jeba