உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற கீழப்புதூர் சந்தன மாரியம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கீழப்புதூரில் பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை புரணமைப்பு செய்து செல்வ விநாயகர், காளியம்மன், முத்தாலம்மன், பொன் வைரவன் மற்றும் சந்தனமாரியம்மன் என அனைத்து தெய்வங்களுக்கும் கோபுரங்கள் எழுப்பப்பட்டு குடமுழுக்கு பூஜை வெகு விமரிசையாக நடை பெற்றது.
புத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் சிவாச்சாரியார்கள் மூன்று நாட்களாக
கணபதி ஹோமத்தில் துவங்கி பல்வேறு யாக பூஜைகள் என மூன்று கால யாக பூஜைகள்
செய்து வருகின்றனர். தொடர்ந்து செல்வ விநாயகர், காளியம்மன், முத்தாலம்மன், பொன் வைரவன் மற்றும் சந்தனமாரியம்மன் சுவாமிகளின் கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு பூஜையை செய்து வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், கோவிலின் கருவறையில் உள்ள சந்தன மாரியம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.,
இந்த குடமுழுக்கு விழாவில் அனைத்து கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் மற்றும்
உசிலம்பட்டியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கலந்து கொண்டு குடமுழுக்கு பூஜை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் சார்பில் 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
—ம. ஶ்ரீ மரகதம்