எல்காட் நிறுவனம் மூலம் தனியார் பங்களிப்புடன் ஐ.டி வளாகங்கள் – 3 இடங்களில் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்!!

ELCOT நிறுவனம் மூலமாக தனியார் பங்களிப்புடன் 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வளாகங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன், தகவல் தொழில்நுட்பம் (IT), தகவல்…

ELCOT நிறுவனம் மூலமாக தனியார் பங்களிப்புடன் 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வளாகங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன், தகவல் தொழில்நுட்பம் (IT), தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (ITeS) வழங்குவதில் ELCOT முக்கிய பங்காற்றுகிறது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் 1,378.16 ஏக்கர் நிலப்பரப்பில் 8 தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் உருவாக்கியுள்ளது.

இதன்மூலமாக உள்ளூர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை உலகளாவிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்க உதவி வருகின்றது. ELCOT நிறுவனம் மூலமாக தனியார் பங்களிப்புடன் 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வளாகங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : விஜயின் மாணவர் சந்திப்பு – அரசியலை நோக்கிய அடுத்த நகர்வா…? யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்…?

செங்கல்பட்டு – ஆலப்பாக்கம், ஈரோடு – பெருந்துறை கருமாண்டி செல்லிப்பாளையம், திருநெல்வேலி – பாளையங்கோட்டை மேலப்பாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள வளாகங்களுக்கான வடிவமைப்பு, திட்டமிடல் குறித்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டில் ELCOSEZ-கள் மூலமாக ரூ.22,958 கோடி அளவிற்கு ஏற்றுமதி, சுமார் 94,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.