தெலங்கானா மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த தனியார் உள்விளையாட்டு அரங்கத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் மொய்னாபாத் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த தனியார் உள்விளையாட்டு அரங்கத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்துப் பேசிய ராஜேந்திரநகர் காவல் துணை ஆணையாளர் ஜெகதீஸ்வர் ரெட்டி, “உயிரிழந்தவர்களில் ஒருவரது உடலை மீட்டுள்ளோம். இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றொருவரின் உடலை மீட்பதற்கு முயற்சித்து வருகிறோம். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன.” என்று கூறினார்.







