தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.
நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் கொடியேற்றி மரியாதை செலுத்தினர். சென்னை காமராஜர் சாலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மேலும் முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தலைநகர் டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் எல்சிசி பங்கேற்றார்.இந்நிலையில் தெலுங்கானாவில் ஆளுநர் மாளிகையில் நடந்த குடியரசு தின விழாவை, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஆனால், இந்த விழாவில் பங்கேற்காமல், முதலமைச்சர் சந்திசேகர ராவ் புறக்கணித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.